Thursday, June 9, 2011

நிலவில் மனிதன் கால் வைக்க காரணம் !!

நிலவில் மனிதன் ஏன் கால் வைத்தான்?
காரணம் புரியாத இந்த கேள்விக்கு பதில்:
கால் வைக்க இடம் இருப்பதால். இது என்னுடைய பதில் இல்லை.
கென்னடியின் தன்னிலை விளக்கம் தன் இது.

1961 ம் ஆண்டு, ஏப்ரல் 12,  சோவியத் ரஸ்யா விண்ணில் மனிதனை முதலில் பறக்கவிட்ட அடுத்த நாள், நடு நடுங்கிப்போன அமெரிக்கா அதிபர் கென்னடி தலைமையில், நாட்டின் அறிவியல் மற்றும் வானியல் அமைப்பில் ஒரு கூட்டம்  கூட் டியது, எதிரியின் வெற்றியில் எரிச்சலடைந்திருந்த ஆட்சிமன்ற  உறுப்பினர்கள், ஒருத்தர் பாக்கியில்லாமல் கென்னடியின் 'பதிலுக்கு நாமும் உடனடியாக ஏதேனும் செய்யவேண்டும்' என்ற கருத்திற்கு கையை தூக்கினர்கள்.

Image courtesy : Wikipedia



'என்ன செய்வது?' என்று கேட்டு துணை அதிபருக்கு (ஜான்சொன்) கென்னடி கடிதம் எழுத, அத்தை தூக்கிக்கொண்டு NASA வுக்கு ஓடினார் ஜான்சொன் 15
நா ட்களில் NASA விடம் இருந்து பதில் வந்தது " நிலாவுக்கு போகலாம், அதற்கு போக ரஷ்யாவிற்கு இன்னும் நாளாகும்".
இது பிடித்துப்போக மே - 25 ம் தேதி அறிவித்தும் விட்டார். NASA அறிஞர்களே இது நடக்குமா என்று யோசிக்க, கென்னடி-க்கும் கிலி பிடித்தது, ஒரு கட்டத்தில் பேசாமல் ரஷ்யா உடன் கூட்டு சேர்ந்து இதை முடிக்கலாமா? சொல்லிவிட்டோமே என்று கூட யோசித்தார்.


செலவு : 24,000 ம் கோடி மட்டுமே (2G ய விடவும் கம்மிதான்)
                  400,000 பேர் வேலைக்கு
                  20,000 நேரடி மற்றும் மறைமுக கம்பேனிகள்/ ஆராய்ச்சி நிறுவனங்கள்

இத்தனையும் உள்ளே இறக்க கொஞ்சம் தைரியம் வந்தது கென்னடிக்கு. பிறகு 1962 வாக்கில் சொன்னார்:
நாங்கள் நிலவிற்கு ஏன் போக
நினைத்தோமென்ன்றல் " அது எளிது என்பதால் அல்ல; அது கடினமானது என்பதால்; இந்த சவால் நம்மை நம் திறமையின் உச்சதிற்கும்; நம் சக்தியின்  உச்சதிற்கும் கொண்டுசெல்லும் ஏன்பதால்"

இதே காலகட்டத்தில் ரைஸ் பல்கலைகழகத்தில் ஆற்றிய ஒரு உரையில் தான் இதை கூறினார்: 
"நிலவில் மனிதன் ஏன் கால்வைக்க வேண்டும்? அங்கு கால் வைக்க இடம் இருக்கிறது"; அவர் இவ்வாறு சொல்ல அவரே சொன்ன குட்டி கதைதான் இது:

பல வருடங்களுக்கு முன் இங்லாந்தின் புகழ் பெற்ற மலையேற்ற வீரர் (பின்நாளில் எவரெஸ்ட் மலையேறும் போது அங்கேயே இறந்தும் போனார்) ஜார்ஜ் மல்லாரி - யிடம் ஏன் நீங்கள் மலை ஏற விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டதற்கு  அவர் " அது அங்கே இருக்கிறது" என்று பதிலளித்தார்.





No comments:

Post a Comment